Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

ஆளே இல்லாத கிரவுண்டில் சிக்ஸர் அடிக்க இறங்கிய விஷால்.! தியேட்டர்காரர்களின் புது டிவிஸ்ட்.!

Gossip

ஆளே இல்லாத கிரவுண்டில் சிக்ஸர் அடிக்க இறங்கிய விஷால்.! தியேட்டர்காரர்களின் புது டிவிஸ்ட்.!

கொரோனா பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தியேட்டர்களுக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருவதால் பிரமாண்ட திரைப்படங்கள் அனைத்தும் ரிலீஸில் இருந்து தப்பித்து ஒதுங்கிவிட்டன.

தமிழில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வலிமை திரைப்படம் சோலோ ரிலீசாக வெளிவர திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக வலிமையையும் ரிலீஸில் இருந்து பின் வாங்கியது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி விஷால் தனது வீரமே வாகை சூடும் திரைப்படத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளார். பொங்கலுக்கு வேறு பெரிய படங்கள் வரவில்லை. ஆதலால் கண்டிப்பாக தொடர் விடுமுறை என்பதால் தியேட்டரில் கூட்டம் கூடும். அதனால் தனது திரைப்படத்திற்கு அதிக விலை கேட்டுள்ளார் விஷால்.

விஷாலின் சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை ஆதலால் படத்தை அதிக விலைக்கு வாங்க விநியோகிஸ்தர்கள் முன்வரவில்லை. மாறாக, தியேட்டர்காரர்கள் புதிய முடிவை எடுத்துள்ளாராம்.

படத்தை காசு கொடுத்து வாங்காமல் திரையிட்டு வரும் வசூலில் பங்கு பிரித்து கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளாராம். இந்த முடிவுக்கு விஷால் ஒத்துவருவாரா அல்லது வீரமே வாகை சூடும் திரைப்படமும் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்போகிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top