Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

வலிமை தியேட்டர் ரிலீஸில் உறுதியாக இருக்கும் அஜித்.! 300 கோடிக்கு விலை பேசப்பட்ட பின்னணி.!

Gossip

வலிமை தியேட்டர் ரிலீஸில் உறுதியாக இருக்கும் அஜித்.! 300 கோடிக்கு விலை பேசப்பட்ட பின்னணி.!

50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு இத்தனை தடைகளையும் தாண்டி அஜித்குமார் நடித்த வலிமை திரைப்படம் திரைக்கு வந்துவிடும் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர்.

பட தயாரிப்பு நிறுவனமும் வலிமை ரிலீஸில் உறுதியாக இருந்ததாம். ஆனால் விநியோகிஸ்தர் தரப்பு பின்வாங்கிவிட்டதாம். தற்போது 5 ஆயிரம் இருக்கும் கொரோனா பாதிப்பு ரிலீஸ் ஆகும் நாளன்று 2 மடங்காகிவிட்டால் பேசும் சிக்கலாகிவிடும் என கூறிவிட்டார்களாம்

பிறகு, தயாரிப்பாளர் போனிகபூர், அஜித்குமார், தமிழக விநியோகிஸ்தர் மதுரை அன்பு ஆகியோர் போனில் கூடி பேசியுள்ளாராம். அதில் அஜித் வலிமை தியேட்டர் ரிலீஸில் உறுதியாக இருந்துள்ளார். அதனால், தற்போதைக்கு தியேட்டர் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி மாதம் கழித்து ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும். ஆனால், இரவு ஊரடங்கு, ஞாயற்றுக்கிழமை முழு ஊரடங்கு இவை நீங்கினாலே வலிமை ரிலீஸ் ஆகிவிடும் என நம்பிக்கையுடன் தியேட்டர் அதிபர்கள் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையில் OTT நிறுவனங்கள் படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றவுடன் 300 கோடிவரைக்கும் வலிமையை கேட்டுள்ளனர். ஆனால், போனி கபூர் அதனை மறுத்துவிட்டாராம். விரைவில் தடைகள் தாண்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்கிற நம்பிக்கையில் அஜித் ரசிகர்கள் மீண்டும் காத்திருக்க தொடங்கியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top