Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

வலிமை தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? தமிழக முதல்வர் கையில் முடிவு.!

Movies

வலிமை தியேட்டரில் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? தமிழக முதல்வர் கையில் முடிவு.!

இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு. ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு வலிமை குறித்த தேதியில் ரிலீஸ் ஆகுமா ஆகாதா தெரியவில்லையே என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக அறிவிப்பு வெளியானது. வலிமை திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என தமிழக அரசு அறிவித்துவிட்டது. மேலும் இரவு நேர ஊரடங்கையும் தற்போது அறிவித்துவிட்டது.

அதனால், தியேட்டரில் வலிமை ரிலீஸ் ஆகுமா இல்லை RRR போல வலிமை திரைப்படம் தள்ளி வைக்கப்படுமா என இன்னும் தெரியவில்லை. மேலும் இந்த வார ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வரும் பொங்கல் வாரம் என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்க போகிறதோ என தியேட்டர்காரர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top