இந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாகிய ரஷ்மிகா மந்தனா மற்றும் தென்னிந்தியாவின் சூப்பர்ஸ்டாராகிய நடிகர் மகேஷ் பாபு அவர்கள் இணைந்து தற்போது நடித்துள்ள தமிழ் படம் தான்  சரிலேரு நீக்கவேறு. இந்த படத்தில் தங்களது அனுபங்களை குறித்து அண்மையில் நடிகை ரஷ்மிகா கூறியுள்ளார்.

அதில், மகேஷ் பாபுவோடு இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் ரொம்பவே சந்தோஷமடைந்தேன். ஆனால், படப்பிடிப்பு ஆரம்பமாகியதும் என்னையறியாத ஒரு பதற்றமும், எனது நடிப்பை பற்றி என்ன நினைப்பாரோ என்ற பயமும் என்னுள் தொற்றிக்கொண்டது.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே, நான் சோர்ந்து மாறுவதை கவனித்த நடிகர் மகேஷ் பாபு என்னிடம் வந்து நடிப்பு  ரகசியங்களை சொல்லி தருவார். இத்தனை பெரிய நடிகர், இவ்வளவு எளிமையாக எல்லோரிடமும் பழகுகிறாரே என வியந்திருக்கிறேன், ஏனென்றால் அவர் படப்பிடிப்பு நடக்கையில் நான் தயக்கமடைவதை கண்டு அதை உடைப்பதற்கான வழிகளையெல்லாம் சொல்லி தந்திருக்கிறார் என கூறியுள்ளார் ரஷ்மிகா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here