Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

தமிழ் – தெலுங்கு – ஹிந்தி.! தியேட்டரில் வலிமையாக ரிலீஸ் ஆகும் அஜித்தின் வலிமை.!

News

தமிழ் – தெலுங்கு – ஹிந்தி.! தியேட்டரில் வலிமையாக ரிலீஸ் ஆகும் அஜித்தின் வலிமை.!

வலிமை திரைப்படம் ஜனவரி 13இல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு பேன் இந்தியா திரைப்படம் போல ரிலீஸ் ஆக உள்ளது என படக்குழு அறிவித்துவிட்டது.

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்கு முந்தைய வாரம் அதாவது இந்த வாரம் ஜனவரி 7ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டிருந்த RRR திரைபடம் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

அதனால், வலிமை ரிலீசும் தள்ளி வைக்கப்படுமோ.? அஜித் ரசிகர்களின் இரண்டு வருட தவம் வீணாகிவிடுமோ என ரசிகர்கள் பயந்து போய் தான் இருக்கின்றனர். ஆனால் படக்குழு ரிலீஸில் உறுதியாக இருக்கிறது.

ஏற்கனவே தியேட்டர்கள் தங்கள் இணையப்பக்கத்தில் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டனர். இருந்தாலும் படக்குழு அறிவிக்காமல் இருந்தது. தற்போது படத்தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் தேதியை அறிவித்து ரிலீஸை உறுதி செய்துள்ளது.

கூடுதல் போனஸ் செய்தியாக வலிமை திரைப்படம் தமிழில் மட்டும் ரிலீஸ் இல்லை தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு பேன் இந்தியா திரைப்படம் போல ரிலீஸ் ஆக உள்ளது என அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News

To Top