இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா அட்டகாசமாக நடித்து அண்மையில் வெளியாகிய படம் தான் தர்பார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா அவர்கள் இயக்கத்தில் இவர் நடிக்கவுள்ள படம் தான் இவரது 168 வது படமாகும். இவர் தற்போது அரசியலில் இணையவுள்ளதால் அவர் சித்திரை மாதத்தில் தனது கட்சியை தொடங்கவுள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் சென்னை வந்திருந்த இலங்கையின் வடகிழக்கு மாகாண முன்னாள் முதல்வராகிய விக்னேஸ்வரன் ரஜினியிடம் இலங்கையை வந்து பார்வையிட்டு செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்காக அவர் விசா பதிவு செய்த போது, இலங்கை அரசு அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இலங்கை அரசாங்கம் கூறுகையில், அவர் நடிகராக வந்து சென்றால் நாங்கள் எந்த ஆட்சேபணையுமில்லாமல் வரவேற்போம். ஆனால், அவர் அரசியலில் உள்ளதால் தேவையில்லாத குழப்பங்கள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் தான் விசா வழங்கவில்லை என இலங்கை அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here