Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரினார் சித்தார்த் ….!

Saina

Celebrities

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரினார் சித்தார்த் ….!

பிரதமரின் பஞ்சாப் பயணம் குறித் து கருத்து தெரிவித்த பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவால், பிரதமருக்கே பாதுகாப்பற்ற நிலை உள்ள போது நாட்டிற்கும்  பாதுகாப்பில்லை என கருத்து தெரிவித்திருந்தார். இதற்க்கு பதில் கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த், உலகில் நுட்பமான சேவல் சாம்பியன். கடவுளுக்கு நன்றி, இந்தியா எங்களிடம் பாதுகாப்பாக உள்ளது என கூறியிருந்தார்.

இவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,தற்போது நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அன்புக்குரிய சாய்னா  கடந்த சில தினங்களுக்கு முன்பாக நீங்கள் பதிவிட்ட டிவிட்டர் பதிவிற்கு நான் பதிவிட்ட மூர்க்கத்தனமான பதிலுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நகைச்சுவையை பொருத்தவரை புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் அது நகைச்சுவை அல்ல.

எனவே சரியாக புரிந்துகொள்ள முடியாதபடி நகைச்சுவை பதிவிட்டதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இந்த விவகாரத்தை விட்டுவிட்டு, எனது இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன். நீங்கள் எப்பொழுதும் எனது வெற்றியாளர் தான் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Celebrities

To Top