தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் ரம்யா நம்பீசன். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய விஜய் சேதுபதியின் சேதுபதி படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகினார்.

தற்போதும், இயக்குனர் பாபு யோகேஸ்வரன் அவர்கள் இயக்கத்தில் தமிழரசன் என்னும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் ஒரு குறும்படம் ஒன்றை இயக்கி உள்ளார்.

நடிகையாக வலம் வந்த இவர் தற்போது இயக்குனர் பணியிலும் நுழைய ஆரம்பித்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் அன்ஹைடிங் என்ற தலைப்பில் மூன்று நிமிட படம் ஒன்றை இயக்கி உள்ளேன். காதல் பற்றிய வித்தியாசமான ஒரு சிந்தனை ஏற்படுத்தக்கூடிய படம். இது காதலர் தினம் அன்று வெளியிட உள்ளேன் என கூறியுள்ளார். இந்த படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here