Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

வலிமையுடன் நாய் சேகரை பொங்கலுக்கு களமிறக்க படக்குழு ‘பலே’ திட்டம்.?!

Movies

வலிமையுடன் நாய் சேகரை பொங்கலுக்கு களமிறக்க படக்குழு ‘பலே’ திட்டம்.?!

RRR திரைப்படம் தள்ளிப்போனது. வலிமை மட்டுமே பொங்கல் ரிலீஸ் என்பதால், நாய் சேகர் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு முயற்சி செய்து வருகிறதாம்.

தமிழில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக திகள்பவர் நடிகர் சதீஸ். இவர் முன்னணி கதாநாயகனாக நடித்து அடுத்து ரிலீசுக்கு தயாராகியுள்ள திரைப்படம் நாய் சேகர். இந்த திரைப்படத்தில் குக் வித் கோமாளி பவித்ரா ஹீரோயினாக நடித்து உள்ளார். இப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எனும் புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார்.

இப்படத்தின் டீசர் புத்தாண்டை முன்னிட்டு வெளியானது. ஒரு மனிதன் நாய் போலவும், நாய் மனிதன் போலவும் பழக்கவழக்கங்களை மேற்கொள்கிறார்கள் அது அந்த மனிதனின் வாழ்வில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது போல கட்டப்பட்டிருந்தது.

படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதே ஈர்ப்பு படம் முழுக்க இருந்தால், கண்டிப்பாக படம் வெற்றியடையும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். இதனால் புதுத்தெம்பு வந்த படக்குழு படத்தை உடனடியாக களமிறக்க முயற்சி மேற்கொள்கிறது.

RRR திரைப்படம் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துவிட்டது. பொங்கலுக்கு வலிமை மட்டுமே வெளியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தங்களுக்கு கணிசமான திரையரங்குகள் கிடைக்கும் என்பதால், பொங்கலுக்கு திரைப்படத்தை களமிறக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.

அதே போல, விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top