இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களாகவும், பல திரையுலக பிரபலங்கள் இணைந்தும் உருவாக்கிவரும் பிரமாண்டமான படம் தான் இந்தியன் 2. இந்த படத்தினை குறித்து நடிகை காஜல் அகர்வால், மும்பையில் நடந்த ஒரு கண்காட்சியில் பேசியுள்ளார்.

அப்பொழுது பேசிய அவர், இயக்குனர் சங்கர் என்னிடம் இந்த படம் பற்றி கூறுகையில், நான் எனது கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என யோசித்தேன். அதன் பின்பு தான் கூறினார்கள் 85 வயது கிழவியின் வேடம் தான் என்னுடையது என்று, ஆனால், அந்த கதாபாத்திரம் தான் கமல் சாருக்கு அடுத்ததாக பேசப்படும் என்பது தெரிந்துவிட்டது.

பல மணிநேரங்கள் மேக் அப்புக்கு மட்டுமே ஆகும். ஆனாலும் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் அதிலும் கவனம்  செலுத்துகிறேன்.அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. ஆனால், இந்த படத்தில் நடித்ததற்கு பின்பு எனது இமேஜ் உயரும் என்பது உறுதி என நடிகை காஜல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here