Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

மிரட்டல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா.! பான் இந்திய நடிகராக விஷால்.! அசத்தும் மார்க் ஆண்டனி அப்டேட்ஸ்.!

Movies

மிரட்டல் வில்லன் எஸ்.ஜே.சூர்யா.! பான் இந்திய நடிகராக விஷால்.! அசத்தும் மார்க் ஆண்டனி அப்டேட்ஸ்.!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் 5 மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க உள்ளார்.

திரிஷா இல்லனா நயன்தாரா, AAA ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக பிரபுதேவாவை வைத்து பகீரா எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். இப்படத்தின் ட்ரைலர், டீசர் வெளியாகி இளசுகளை கவர்ந்த நிலையில் விரைவில் இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் விஷாலுடன் கைகோர்க்க உள்ளார். இந்த படத்திற்கு மார்க் ஆண்டனி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் மதுரையை மையமாக வைத்து 1960 காலகட்டத்தில் நடக்கும் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக உள்ளதாம்.

அதிகமான பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக படத்தின் போஸ்டரிலேயே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என வெளியாக உள்ளதாம்.

இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறாராம். விரைவில் இப்படம் பற்றிய அடுத்தகட்ட அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top