Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

விஷாலின் ‘பிக் பட்ஜெட்’ பட போஸ்டரில் இருப்பது ஜி.வி.பிரகாஷா?! உண்மையில் நடந்தது என்ன?

Gossip

விஷாலின் ‘பிக் பட்ஜெட்’ பட போஸ்டரில் இருப்பது ஜி.வி.பிரகாஷா?! உண்மையில் நடந்தது என்ன?

விஷால் நடிப்பில் அடுத்ததாக பிரமாண்டமாக தயாராக உள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த திரைப்படத்தை திரிஷா இல்லைனா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாம்.

இப்படத்தின் போஸ்டர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த போஸ்டரில் ஹீரோ திரும்பி நிற்பது போல இருக்கும். ஆனால், எந்த கோணத்தில் பார்த்தாலும் அது விஷால் போல தெரியாது. சில ரசிகர்கள் அதனை ஜி.வி.பிரகாஷ் என கூற ஆரம்பித்துவிட்டனர்.

உண்மையில் நடந்தது என்னவென்றால், ஆதிக் ரவிச்சந்திரனின் AAA படத்தின் தோல்விக்கு பிறகு ஆதிக் மீண்டும் தனது முதல் பட நாயகன் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து புதிய படத்தை பிரமாண்டமாக ஆரம்பிக்க இருந்தாராம். அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டதாம்.

அதற்கென போஸ்டர்கள் கூட ரெடியாகிவிட்டதாம். ஆனால், கடைசி நேரத்தில் அது நடக்காமல் போனதாம். தற்போது அந்த போஸ்டரை / கதையை அப்படியே விஷாலுக்கு கூறி ஓகே செய்து பான் இந்தியா திரைப்படமாக ஆதிக் இயக்க உள்ளார் என கோலிவுட் வட்டாரம் பேசிக்கொள்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top