அல்லிராஜா சுபாஷ்கரணின் லைகா புரொடெக்சன்ஸ் என்கிற நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் ரஜினிகாந்தின் புதிய தமிழ் திரைப்படம் தான் தர்பார்.

இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக, லேடி சூப்பர்ஸ்டார்  நடித்துள்ளார். இந்த படத்தின் சும்மாகிழி எனும் பாடல் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வருகின்ற 9 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு யு /ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதற்க்கு கரணம் படத்தில் அதிகப்படியான சண்டை காட்சிகள் இடம்பெற்றுள்ளது தான் என கூறுகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த படத்துக்கான ப்ரோமோ பாடல் வெளியாகியது. டும் டும் என துவங்கும் இந்த பாடலை இந்த இரண்டு நாட்களுக்குள் 1.6 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here