ரஜினிகாந்த்  தர்பார் திரைப்படத்தின்  பாடல் வெளியீட்டு விழா  கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த விழாவில் பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் பேசினார் சில தகவலை பகிர்ந்தார் .அவர் பேசுகையில், தலைவர் ரஜினிகாந்த் படம் வெளியாகும்போது, போஸ்டர் ஒட்டும்போது சண்டையிட்டுள்ளேன். கமல் சார் போஸ்டர் ஒட்டினால் அதில் சாணி அடித்தேன் .ஆனால்  என்னுடைய மனநிலை அப்போது அப்படி இருந்தது. இப்போது தான் தெரிந்தது இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்று .

இந்த நிலையில் இன்று மக்கள் நீதி  மன்ற தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து லாரன்ஸ். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தகவலில், அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மையத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.

இந்நிலையில் இன்று  மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளேன். இந்த விளக்கத்தை நான் கமலை நேரில் சந்தித்து விளக்கினேன் அவரும் மிகவும் அன்புடன் என்னை எவருக்கு என் நன்றியையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here