Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி!

News

கீர்த்தி சுரேஷுக்கு கொரோனா தொற்று உறுதி!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலிவுட்டைப் போலவே, பல தென்னிந்திய சூப்பர்ஸ்டார்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கடந்த வாரம் மட்டும் நடிகர் அருண் விஜய், நடிகை மீனா, திரிஷா, நடிகர் சத்யராஜ், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். சுரேஷ் அவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் தனது  டிவிட்டர் பக்கதில், லேசான அறிகுறியுடன் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


அனைத்து கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான கண்காணிப்பில் உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து பரிசோதிக்கவும்.

நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால், தடுப்பூசிகளை விரைவாக போட்டு கொள்ளுங்கள். விரைவில் குணமடைந்து விடுவேன் என்று நம்புகிறேன், விரைவில் மீண்டும் செயல்படுவேன் என்று கீர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top