1996 ஆம் ஆண்டு வெளியாகிய இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் அடுத்த படம் தான் இந்தியன்-2. இந்த படத்தை இயக்குனர் சங்கர் அவர்கள் தான் இயக்குகிறார். உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கமலுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கிறார். இந்த படம் வருகின்ற 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் உடல் நல குறைவால் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது தான் வீடு திரும்பியுள்ளார். இதனால், அவரால் சண்டை காட்சிகளில் நடிக்க முடியாது என கூறி அவருக்கு டூப் வைத்து தான் காட்சிகள் எடுக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியது.

ஆனால், அது பொய்யான தகவல் என படக்குழு அறிவித்துள்ளது. கமல் தான் அவரது காட்சிகளில் நடிப்பார் எனவும், வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அறிவித்துள்ளனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here