பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் சீயான் விக்ரமின் தெய்வத்திருமகள் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய குட்டி நடிகை தான் சாரா. இவர் அதனை தொடர்ந்தும் சில தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்தார். கடைசியாக சைவம் படத்தில் நடித்திருந்தார்.

இவர் தற்போது ஓரளவிற்கு சமூகம் பற்றி புரிதல் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இவருக்கென தனி இணையதள பக்கங்களும் உள்ளன. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து உரையாடிக்கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் காமிட்டடா இல்லனா சிங்கிளா என கேள்வியெழுப்பியுள்ளார். அதற்க்கு பதிலளித்த அவர், கடற்கரை ஓரமாக ஒரு சிங்கிள் காலடி இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். சொல்லாமல் நான் சிங்கிள் என அவர் கூறியுள்ளதால் ரசிகர்கள் அவரது சிறு வயதிலேயே அறிவுடன் பதிலளிக்கும் அவரை பாராட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here