விஜய் சேதுபதி 2004 ஆம் ஆண்டு எம்.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி எனும் தமிழ் திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகர் தான் விஜய் சேதுபதி.

இவர் அதனை தொடர்ந்தும் பல தமிழ் வெற்றி படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தென்னிந்தியாவின் பிரபலமான நட்சத்திரமாக வலம் வருகிறார். தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் எல்லா கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

ராஜ முதல் பிச்சைக்காரன் வரை அணைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். தற்போதும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவாக்கி வரும் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான திறமைகளை உள்வைத்துள்ள இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சனவரி 16, 1978 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு இன்றோடு 42 வயது ஆகிறது. இவரது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும் கூட வலது தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here