இரண்டு வருடத்திற்கும் மேலாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு தற்போது ஒரு வழியாக இன்று கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் முதன்முதலாக நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீசாகி விட்டது. இந்த படத்தை தற்போது வரை எதிர்பார்க்க வைக்க முக்கிய காரணம் கௌதம் மேனன் – தனுஷை தண்டி அந்த படத்தில் இடம்பெற்றுள்ள மறுவார்த்தை பேசாதே பாடலும் ஒரு முக்கிய காரணமாகும். நிஜமாகவே படத்தின் பெரிய பலம் இசை தான். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தர்புகா சிவா.

படத்தில் ரகு  என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் சிட்டி பையனாக நடித்து உள்ளார். தனது வழக்கமான பாணியில் இருந்து சற்று விலகி கௌதம் வாசுதேவ் மேனன் ஹீரோவாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். படம் முழுக்க ராகு தனது நடிப்பால், காதல் வலியால், கசிந்துருகும் காதலனாய், ஆக்ரோஷமாய் என பலவிதமாக கவர்கிறார். அதற்கு ஈடுகொடுக்க மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சித்துள்ளார்.

படத்தின் இசை தர்புகா சிவா. அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அதிலும் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் கொடுத்துள்ள பின்னணி இசை படத்தை கவனிக்க வைக்கிறது. படத்தின் நல்ல விஷயம் இசையமைப்பாளர் தர்புகா சிவா மற்றும் தனுஷின் நடிப்பு மட்டுமே.

முதல் பாதி முழுக்க காதல் காட்சிகளாக நகர்கிறது. தனுஷ் – மேஹா ஆகாஷ் காதல் காட்சிகளில் மிகவும் இயல்பாகவும், அழகிய காதலுடன் நடித்துள்ளனர். அடிக்கடி கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது என சிங்கிள்ஸ்-ஐ கடுப்பாக்கியுள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன். உங்கள் காதல் துணையோடு சென்று பார்த்தால் இந்த காட்சிகள் உங்களை மிகவும் ரசிக்க வைக்கும்.

 

ஆனால், இரண்டாம் பாதியில் கதை கொஞ்சம் தடுமாறி என்ன படம் என்ன சொல்ல வருகிறது என்பதை சரிவர சொல்ல முடியாமல் போனதோ என்கிற தோற்றம் உருவாகியுள்ளது. முதல் பாதி அழகாக இருந்தாலும், இரண்டாம் பாதி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதே உண்மை.

அதிலும் சசிகுமார் இந்தப் படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் டிரேட்மார்க் ஆங்கில வசனங்கள் பேசும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சசிகுமாரை கிராமத்து கதாபாத்திரத்தில் பார்த்துவிட்டு, இதில் ஆங்கிலம் பேசும் கதாபாத்திரத்தில் பார்க்க அதனை ரசிக்க முடியவில்லை.

மொத்தத்தில் கௌதம் வசுதேவன் படம் தனுஷ் படம் எப்படி இருந்தாலும் ரசிப்பேன் என்றால் இப்படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். மற்றபடி மறுவார்த்தை பேசாதே என்ற ஒற்றை பாடலுக்காக வருபவர் என்றால் உங்களுக்கு திருப்தி அள்ளிக்குமா என்பது சந்தேகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here