Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

தனுஷின் ‘வாத்தி’ பட ஷூட்டிங் தொடங்கியது..!

News

தனுஷின் ‘வாத்தி’ பட ஷூட்டிங் தொடங்கியது..!

தனுஷின் ‘வாத்தி’ ஷூட்டிங் ஆரம்பமானது.

நடிகர் தனுஷின் மாறன் திரைப்படம் திரைக்கு வர தயாராகி உள்ளது. இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். அதனை தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது, வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு வாத்தி, சார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை தெலுங்கிலும் திரையிட உள்ளனர் இந்நிலையில், தமிழில் வாத்தி என்றும், தெலுங்கில் சார் என்றும் தலைப்பு சூட்டப்பட்டுள்ளது

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிரார். கடந்த ஜனவரி 3-ஆம் தேதி வாத்தி படத்தின் பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், வாத்தி படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியது. இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் டிவிட்டர் பக்கத்தில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் மாணவர் கெட்டப்பில் இருக்கிறார் வாத்தியாரும் இவர் தான் மாணவரும் இவர் தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top