நடிகர் பிரசன்னா பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவருக்கு ஒரு குறிப்பிட்ட காலங்களில் பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். ஆனால்,  தற்போது இவர் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது கூட இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் இயக்கத்தில் மாபியா என்னும் படத்தில் பிரபல நடிகர் அருண் விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் வில்லனாக நடிக்க பிரசன்னாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வந்தது. ஆனால், அதன் பின் சில காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்று தகவல்கள் வெளியானது. அஜித் படத்தை மிஸ் செய்து விட்டோமே என்று வருந்தும் பிரசன்னா தற்போது குஷி ஆகும் அளவுக்கு அவருக்கும் தனுஷ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

தனுஷ் நடிக்க உள்ள அவரது நாற்பத்தி மூன்றாவது படத்தில் முக்கியமான ரோலில் பிரசன்னா நடிக்க இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனராகிய கார்த்திக் நரேன் தான் தனுஷின் இந்தப் படத்தை இயக்குகிறார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் உள்ள மாபியா படத்தில்தான் பிரசன்னா தற்போது நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here