நடிகர் தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அசுரன். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. 100கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படம் 100நாட்கள் தாண்டிய நிலையில் இன்னும் சில திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அண்மையியல் நடந்த ஜீ தமிழ் சினிமா விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் தனுஷிற்கு சிறந்த நடிகர் என்ற விருது அசுரன் திரைப்படத்திற்காக கிடைத்தது. அந்த விருது விழாவில் அவரிடம் சில கேள்விகள் கேட்டதற்கு பதிலளித்தார்.

தொகுப்பாளினி அர்ச்சனா தனுஷ் அவர்களிடம் எப்படி சார் உங்கள எல்லாத்துக்கும் பிடிக்குது என்று கேட்டார். அதற்கு நடிகர் தனுஷ் தனது ரசிகர்களை பார்த்து நான் அங்கு சென்று அவர்களுடன் அமர்ந்து இருந்தால் என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது அதுதான் காரணம் எனக்குறியுள்ளார்.

அதற்கு பிறகு அர்ச்சனா சார்  ரசிகர்கள் அனைவரும் டயலாக் காக காத்திருக்கின்றன என கூறியவுடன் தனுஷ் அந்த வசனத்தை பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here