இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில் லட்சுமி அகர்வால் எனும் இளம் பெண் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட விவகாரம் உலகளவில் பேசப்பட்டது. தற்போது இந்த சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்திற்கு பெயர் சப்பாக்.

மோகனா குல்சார் அவர்கள் இயக்கிய இந்த படத்தில்  லட்சுமியாக பாலிவுட்டின் பிரபலமான நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்திற்காக அவர் கடினமாக முயற்சி செய்து நடித்துள்ளது அந்த படத்தின் போஸ்டரை பார்த்தே தெரிகிறது.

இந்த படத்தை இயக்குனர் மோகனா குல்சார் மற்றும் தீபிகா பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளனர். அண்மையில் இந்த படத்திற்கான ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் வருகின்ற ஜனவரி மாதம் 10 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here