H.வினோத் இயக்கத்தில் தல அஜித் தனது 64வது படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தின் ஷூட்டிங் வருகின்ற 13ம் தேதி துவங்குகிறது.இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

இப்படத்திற்க்கு நடிகர் மற்றும் நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு கதாநாயகியாக முதலில் நயன்தாரா என சொல்லப்பட்டது. அதன் பின்னர் பாலிவுட் ஹீரோயின் ப்ரணிதி சோப்ரா என கூறப்பட்டது. மேலும் போனிகபூர் ரகுல் ப்ரீத் சிங் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தற்போது வந்த புதிய தகவலின்படி இலியானா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நாடிக்குள்ளாராம். இவர் ஏற்கனவே விஜய் நடித்த ’நண்பன்’ படத்தில் நாயகியாக நடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமில்லாமல் நடிகை யாமி கவுதம் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது . இவர் ‘கெளரவம்’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஆனால் இன்னும் உறுதி ஆகவில்லை படக்குழு வெளியிட்ட பின்னரே உண்மை என்ன என்பது தெரிய வரும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here