இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும்  மாஸ்டர்.  இந்த படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் ஆகியோர் நடித்து வருகின்றனர். படு பிஸியாக மற்றும் விறுவிறுப்பாகவும் தயாராகும் இந்த படத்தில் விஜய் மிகவும் ஆர்வத்துடன் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி வருமானவரித்துறையினர் நடிகர் விஜய் வீடு மற்றும் கேஜிஎஸ் நிறுவனம் பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆகிய 38 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். 24 மணி நேரத்துக்கு மேலாக சென்னையில் உள்ள விஜய்யின் வீட்டில் அவரை அழைத்து சென்று சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இது குறித்து நடிகர் ராதா ரவி அவர்கள் அன்மையில் அளித்துள்ள பேட்டியில் விஜய் யாருக்கும் எதிரி கிடையாது அவர் எளிமையான மனிதர் அவர் மிகவும் அமைதியானவர் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here