நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர உள்ள மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றன.

இந்நிலையில் தளபதி விஜயின்  65 வது திரைப்படத்தை பற்றி தற்பொழுது செய்திகள் ரசிகர்களிடையே பரவி வருகின்றன. அந்தப்படத்தை இயக்குனர் அருண்ராஜ் காமராஜ் அவர்கள் இயக்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் தற்பொழுது தகவல் வைரலாகி வருகிறது.

அதைபோல் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவர்கள் இசையமைப்பதாகவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தளபதி விஜய்க்கு தங்கையாக நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த தகவல் குறித்து இன்னும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார்வபூர்வமான அறிவிப்பை வெளியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here