மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடிகை ப்ரியா பவனி ஷங்கருடன் இணைந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் இவர்கள் இருவரது காம்போ பிடித்து போகவே, தற்போது இயக்குனர் ராதாமோகன் அவர்கள் இயக்கத்தில் இருவரும் ஜோடியாக பொம்மை எனும் படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படம் நடிக்கையில் எஸ்.ஜே சூர்யா ப்ரியா பவனி சங்கருக்கு தனது காதலை வெளிப்படுத்தியதாக ஒரு வதந்தி கிளம்பியது. அதற்கு தனது இணையதள பக்கத்தில் பதிலளித்துள்ள நடிகர் எஸ்.ஜெ. சூர்யா, “சில முட்டாள்கள் தேவையில்லாத வதந்திகளை பரப்புகின்றனர். மான்ஸ்டர் படத்தின் மூலம் ப்ரியா எனக்கு நல்ல நண்பர், அவ்வளவு தான். மற்றபடி தவறான வதந்திகளால் வெறுப்பேற்றதீர்கள். நன்றி என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here