இயக்குனர் கார்த்திக் நரேன் அவர்கள் இயக்கத்தில் பிரபல தமிழ் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் நான் மாபியா. இந்த படம் இன்று காலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர், வில்லனாக நடிகர் பிரசன்னாவும் நடித்து கலக்கி உள்ளனர்.

கதைக்களம்

போதை மருந்து தடுப்பு பிரிவில் பணிபுரியும் அருண்விஜய், கதாநாயகி பிரியா பவானி சங்கர் அவரது குழுவில் உள்ள ஒரு நபர். சென்னையின் மிக முக்கிய இடமான கல்லூரியில் இருக்கும் போதைப் பழக்கத்தை கண்டறிந்து இதை செய்வது யார் என்று ஆராய்கிறார் அருண் விஜய். செய்வது பிரசன்னா என்று அருண் விஜய்க்கு ஒரு தகவல் கிடைக்கிறது, அதனை தொடர்ந்து பிரசன்னாவை தன்னை தேடி வர வைக்க முடிவு செய்த அருண் விஜய் குடும்பத்தை, வில்லன் பிரசன்னா ஒட்டுமொத்தமாக தூக்கிவிடுகிறார். அதன் பின்பு என்ன ஆனது என்பதுதான் படம்.

அண்மைக் காலங்களாக அருண் வித்தியாசமாக கலக்கலான படங்களில் இறங்கி அசத்துவது போல இந்த படத்திலும் அருண்விஜய் நடித்து படத்தை மாஸ்  ஆக்கியுள்ளார். கதாநாயகியாக நடிக்கும் ப்ரியா பவானி சங்கர் சாதாரணமாக அமைதியான பெண்ணாக இல்லாமல் gunshoot மற்றும் சண்டைக் காட்சிகள் என முடிந்த அளவுக்கு நடித்துள்ளார். படத்தின் தொடக்கத்தில் போதை மருந்து குறித்த விழிப்புணர்வை கொண்டு வருவதால் விழிப்புணர்வு படம் போல என ரசிகர்கள் சீ என பார்க்கப்பட்டாலும் அதன் பின்பு படம் எதிர்பார்த்தது போல வித்தியாசமான விறுவிறுப்புடனும் சண்டைக்காட்சிகளும் நடைபெற்று ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்துள்ளது.

ஆனால், முதல் கட்டத்தில் வரும் காட்சிகள் இரண்டாம் கட்டத்தில் இல்லாமல் இருந்தது சற்று போரிங்காக கருதப்படுகிறது. இரண்டாம் கட்டத்தில் பிரசன்னாவின் வில்லத்தனம் மட்டுமே இருக்கிறதே தவிர படத்தில் சூப்பர் என சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இரண்டாவது கட்டம் கொடுக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது கட்டத்தில் சண்டைக்காட்சிகள் விறுவிறுப்பான காட்சிகள் மிகவும் ரசிகர்களை ஆர்வத்தோடு அழைத்துச் சென்றுள்ளது.

படத்தில் சண்டைக் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ரசிகர்களால் கூறப்படுகிறது. துப்பாக்கி சுடும் காட்சியில் இருந்து ரத்தம் தெறிக்கும் காட்சிகள் மிக நுணுக்கமாக அட்டகாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், காட்சிகள் அனைத்தையும் சிசிடிவியில் பார்த்துக்கொண்டிருக்கும் பிரசன்னாவுக்கு அருண்விஜய் மிகவும் கூலாக வந்து கொலை செய்தது சிசிடிவியில் தெரியவில்லையா என்பது நெட்டிசன்களை கலாய்க்க வைத்துள்ள ஒரு காமெடியாக படத்தில் கவனிக்கப்படுகிறது.

இருப்பினும் இயக்குனரின் தனது காரசாரமான கலவைகளை கொடுத்து சண்டைக்காட்சிகள் காதல் மிகவும் அட்டகாசமாக படத்தை உருவாக்கி அருமையான திரைப்படம் போல கொண்டு சென்றுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here