Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

முதன் முறையாக கடல் கன்னியாக களம் காணும் ஆண்டிரியா.!

Movies

முதன் முறையாக கடல் கன்னியாக களம் காணும் ஆண்டிரியா.!

நடிகை ஆண்ட்ரியா, தமிழ் திரைப்பட நடிகைகள் மத்தியில் ஒரு நல்ல நடிகை. நல்ல பாடகி, பாரபட்சம் பாராமல் சக நடிகைக்கு பின்னணி குரல் கொடுப்பவர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் ஆண்ட்ரியா.

ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், உத்தம வில்லன், தரமணி, வடசென்னை என இவர் நடிப்புக்கு முக்கியதுவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் ஆண்ட்ரியா.

இவர் அடுத்ததாக புதிய முயற்சியாக முதன் முறையாக கடல் கன்னியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம். இந்த படத்தை துப்பாக்கி முனை எனும் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்க உள்ளாராம்.

கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் இல்லாமல் இருந்தால் இத்திரைப்பட அடுத்தகட்ட ஷூட்டிங் பிப்ரவரியில் திருச்செந்தூரில் நடைபெற உள்ளதாம். அது முடிந்த பிறகு படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிக்கான வேலைகள் விறுவிறுவென முடித்து, கோடை விடுமுறையில் படத்தை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top