Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

கடல்கன்னியாக களமிறங்கும் ஆண்ட்ரியா..! இந்தியாவின் முதல் கடல்கன்னி திரைப்படம்.!

Movies

கடல்கன்னியாக களமிறங்கும் ஆண்ட்ரியா..! இந்தியாவின் முதல் கடல்கன்னி திரைப்படம்.!

கடல்கன்னி வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்கும் புதிய படத்தின் முழு விவரம் இதோ…

நடிகை ஆண்ட்ரியா தற்போது முக்கிய கதாபத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் துப்பாக்கி முனை பட இயக்குனர் தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதியப்படத்தில் ஆண்ட்ரியா ஒரு கடல்கன்னியாக கெட்டப்பில் நடிக்கிறார் மேலும் இத்திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் வகை கடல்கன்னி திரைப்படம் ஆகும்.

மேலும், பால சுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் நடிகை சுனைனாவும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காமெடி நடிகர் முனிஷ்காந்த் மற்றும் 50 குழந்தைகள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இதற்கிடையில், இப்படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது. சென்னையில் ரூ.50 லட்சம் மதிப்பில் பிரமாண்ட ஷூட்டிங் ஸ்பாட் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தூத்துக்குடி ஒரு சில பகுதியிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இத்திரைப்படத்தை பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து சம்மர் விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நிறைய அனிமேஷன் வேலைகள் இருக்கும் என்றும் ஏற்கனவே அதைத் தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Movies

To Top