Connect with us

Cinebar | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News

யுவன் வேண்டாம்.! H.வினோத்தின் அதிரடி முடிவு.! அஜித்-61இல் இசை இவர்தான்.!

Gossip

யுவன் வேண்டாம்.! H.வினோத்தின் அதிரடி முடிவு.! அஜித்-61இல் இசை இவர்தான்.!

அஜித்குமார் நடிப்பில் இந்த வாரம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த திரைப்படம் வலிமை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் படத்தின் ரிலீஸ் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை H.வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த படத்தை அடுத்து அஜித் தனது அடுத்தப்படமான 61வது திரைப்படத்தையும் வினோத் இயக்கத்தில் தான் நடிக்கிறார். இந்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.

இந்த வலிமை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார். ஆனால், அஜித்தின் அடுத்த படத்தில் யுவன் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் 61வது திரைப்படத்தில் இதுவரை அஜித்துடன் பணியாற்றாத இசையமைப்பாளர் வேண்டும் என வினோத் தயாரிப்பு தரப்பிடம் கோரிக்கை வைத்துள்ளார் அதனை ஏற்று தயாரிப்பு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

அதன் படி அஜித்தின் 61வது திரைப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க உள்ளாராம். விரைவில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Gossip

To Top