கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தான் ரஷ்மிகா மந்தனா. இவர் அண்மையில் நடிகர் விஜய் தேவரைக்கொண்டவுடன் இணைந்து நடித்த டியர் காம்ரேட் எனும் படத்தின் மூலம் அனைத்து திரையுலகிலும் பிரபலமானார்.

இந்நிலையில், இவர் தற்போதும் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடிக்கிறார். இவர் தனது ஒவ்வொரு படத்திற்கு 1 கோடி சம்பளம் வாங்குவதாகவும், ஆனால் அவற்றிற்கு ஒழுங்காக வரி செலுத்துவதில்லை எனவும் கூறப்பட்டது.

இதனால் அவரது பெங்களூர் வீட்டிற்கு வருமான வரித்துறையினர் வந்துள்ளனர். ரஷ்மிகாவின் வருமான வரித்துறையினர் வீட்டை இன்று சோதனை செய்துள்ளனர். சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்த பொது, ரஷ்மிகா அங்கு இருந்தாரா, இல்லையா என்ற சரியான தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here