நம்ப வச்சி கழுத்தறுத்துடீங்களே! கவலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

 
நம்ப வச்சி கழுத்தறுத்துடீங்களே! கவலையில் விஜய் சேதுபதி ரசிகர்கள்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் அட்டகாசமான தமிழ் படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கின்றார்.  மேலும்,மாளவிகா மோகன் கதாநாயகியாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு விஜய் ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுக்கும் வகையில் மாஸ்டர் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 31 ஆம் தேதி வெளியாகியது. அதில் விஜயின் புகைப்படம் மட்டுமே அடங்கியிருந்தது.

இதனால், பொங்கலுக்கு செகண்ட் லுக் வெளியாகும் என கூறப்பட்டதால், பொங்கலுக்கு மறுநாள் அதாவது இன்று 16 ஆம் தேதி விஜய் சேதுபதி பிறந்தநாளாயிருப்பதால், இந்த செகண்ட் லுக்கில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இருக்கும் என விஜய் சேதுபதி ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக அதிலும் விஜயின் புகைப்படமே இருந்தது.

பர்ஸ்ட் லுக் போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுக்க அமைதி என விஜய் சொல்லுவது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடினாலும், எதிர்பார்த்த விஜய் சேதுபதி போஸ்டர் வராததால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

From around the web