நீண்ட நாட்கள் பிறகு “ஹீரோ” படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கும் சின்மயி..!!

 
நீண்ட நாட்கள் பிறகு “ஹீரோ” படத்தில் ரீஎண்ட்ரி கொடுக்கும் சின்மயி..!!

தமிழ்த் சினிமாவின் பின்னணி பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் முதல் திரைப்படப் பாடலை பாடியுள்ளார்.பாடகி சின்மயி சமீப காலமாக, சில பிரபலங்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை வைத்து வருகிறார். இவர் கவிஞர் வைரமுத்துவை குறி வைத்து சில காலங்களாக இந்த குற்றச்சாட்டுக்கு ஆளாக்கி வந்தார்.

சில நாட்களுக்கு முன் டப்பிங்துறையில் இருந்து நீக்கப்பட்டார்.டப்பிங் தற்போது சின்மயி நீதிமன்றம் சென்று மீண்டும் டப்பிங் யூனியனில் அண்மையில் சேர்ந்தார். இந்த பிரச்சனை காரணமாக கடந்த சில காலமாக ஒரு தமிழ் படத்திற்கும் அவர் டப்பிங் செய்யவில்லையாம்.

இந்நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “ஹீரோ” படத்தின் கதாநாயகியான கல்யாணிக்கு சின்மயி டப்பிங் கொடுத்துள்ளாராம். இதற்காக ஹீரோ படத்தின் இயக்குனர் பி.எஸ் மித்ரனுக்கும்  மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி கூறியுள்ளார்.மேலும் அவரது டிவிட்டர் பக்கத்தில் ஹீரோ படத்தில் டப்பிங் செய்வதற்க்கு வாய்ப்பளித்த மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு உண்மையான ஹீரோவாக தெரிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

From around the web