ஜாதி பிரிவினையை தகர்த்தெறிய பாடுபடும் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை திரைப்படம்!

 
ஜாதி பிரிவினையை தகர்த்தெறிய பாடுபடும் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை திரைப்படம்!

இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் அடுத்த சாட்டை. இந்த திரைப்படத்தில் தம்பி ராமையா, அதுல்யா, யுவன், ஸ்ரீராம் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் கல்லூரி முதல்வராக தம்பி ராமையாவும், பேராசிரியராக சமுத்திரக்கனியும்  நடித்துள்ளார்கள். யுவன், அதுல்யா, ஸ்ரீராம் ஆகியோர் மாணவர்களாக நடித்துள்ளனர்.

ஜாதி பிரிவினையை தகர்த்தெறிய பாடுபடும் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை திரைப்படம்!இந்த படத்தில், கல்லூரியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் முன்னுரிமை தரப்பட்டு வந்த நிலையில், அந்த கல்லூரியில் சமுத்திரக்கனி தவறுகளை சுட்டி காட்டி பேசுகிறார். மேலும், அவர் மாணவர்களுக்கு ஜாதிகள் ஏதும் கிடையாது என்று கூறி  மாணவர்களை ஒழுங்குபடுத்துகிறார்.

சமுத்திரக்கனி இப்படிப்பட்ட நற்செயல்களில் ஈடுபடுவதை கண்ட தம்பி ராமையா, சமுத்திரக்கனியின் மீது கோபம் கொண்டு, அவரை எப்படியாவது கல்லூரியில் இருந்து விலக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார். தம்பி ராமையாவின் சாதி வலையில் சிக்காமல் சமுத்திரக்கனி தப்பினாரா? கல்லூரி முதல்வர் தம்பி ராமையா ஜாதிகளை விட்டுவிட்டு நல்ல முதல்வராக மாறினாரா என்பது தான் இந்த படத்தின் மீதமுள்ள கதை.

ஜாதி பிரிவினையை தகர்த்தெறிய பாடுபடும் சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை திரைப்படம்!இப்படம் மாணவர்களால் கல்லூரி சீர்கெடுகிறதா? அல்லது கல்லூரிகளால் மாணவர்கள் சீர்கெட்டு போகிறார்களா? என்பது தான் இந்த படத்தின் கதை. சிறந்த வழிகாட்டி இருந்தால் மாணவர்கள் அனைத்திலும் சிறந்த விளங்குவார்கள் என்பதை இப்படத்தின் கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

இப்படத்தில், ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், முத்தக்காட்சி, புகைபிடித்தல், மது அருந்துதல், கேலி செய்தல், ஆபாசமான விடயங்கள் இந்த படத்தில் இடம் பெறவில்லை. இந்த திரைப்படம், வரும் தலைமுறையினர், சாதி வெறியை உடைத்தெறிந்து ஒற்றுமையுடன் வாழ வழிவகை செய்யும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

From around the web