பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

 
பெப்சி தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

கொரனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், Film Employees Federation of South India(FEFSI)  நிறுவனத்தில் பணிபுரியும் 10000க்கு மேற்பட்டோர் தினசரி வேலைக்கு சென்று தினசரி சம்பளம் வாங்கி வாழ்க்கையை நடத்துபவர்கள் ஆவர். தற்போது அவர்களது வாழ்க்கை வேலைநிறுத்தம் செய்யப்பட்டதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது . எனவே அவர்களுக்கு உதவி செய்ய கோரி பெப்சியின் தலைவரான ஆர்கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரனாவால் மூடப்பட்ட FEFSI நிறுவன ஊழியர்களுக்கு உதவி தொகையாக வழங்கியதை நாம் அறிவோம் . இந்த நிலையில் தற்போது, நடிகர் மற்றும் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற பெப்சி அமைப்பில் உள்ள ஊழியர்களுக்கு ரூ. 10 லட்சத்தை நிதி உதவியாக வழங்கியுள்ளார்.. 

From around the web