ஒரே டேக்கில் பாடி அசத்திய பரவை முனியம்மா…!

 
ஒரே டேக்கில் பாடி அசத்திய பரவை முனியம்மா…!

இன்றைய தினம் பரவை முனியம்மாவின் மரணத்தை அறிந்து பிரபலங்கள் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆம், தூள் படத்திலுள்ள சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி பாடலின் மூலம் பிரபலமானவர் பரவை முனியம்மா. இந்த படத்தில் விக்ரம், ஜோதிகா, விவேக், ரீமா சென் என பலர் இவருடன் நடித்திருந்தார்கள்.

இந்த படத்தின் பாடல்களை கவிஞர் அறிவு மதி எழுத வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்த நிலையில், ‘சிங்கம் போல’ பாடலை யாரை பாட வைப்பது என்று யோசித்த போது, பரவை முனியம்மாவின் குரலை கேட்டவர், அவரையே இந்த பாடலை பாட வைக்க முடிவு செய்துள்ளதுள்ளார்களாம். அதனையடுத்து

அவர் ரெக்கார்டிங்கிற்கு வந்த போது அவரிடம் இது தான் நீங்கள் பாடும் பாடல் என்று ஒரு தாளை கொடுத்து மூன்று முறை இதை பார்த்து பாடி வாசித்து கொள்ளுங்கள் என்று அறிவு மதி கூறியுள்ளாராம். ஆனால் பரவை முனியம்மா எனக்கு படிக்க தெரியாது என்றும், ஒரு தடவை நீங்கள் வாசித்து காட்டி டூன் போடுங்கள், நான் மனதில் ஏற்றுக் கொண்டு பாடிருவேன் என்று கூறியுள்ளார். அதனையடுத்து அவர் ஒரே டேக்கில் மனப்பாடமாக படித்த பாடலை பாடி முடித்துள்ளாராம். அவரது அந்த திறமையை கண்டு பலரும் அசந்துள்ளனர்.

From around the web