50-க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்த ரஷ்மிகா..!

 
50-க்கும் மேற்பட்ட கதைகளை நிராகரித்த ரஷ்மிகா..!

தெலுங்கு திரையுலகில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ரஷ்மிகா மந்தனா. டியர் காம்ரேட் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் கார்த்தி அவர்களுக்கு ஜோடியாக நடித்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன்னை பற்றி கூறியதாவது,நான் மற்றவர்களை பேச விடாமல் நான் மட்டுமே பேசி கொண்டிருப்பேன் எப்போதுமே அமைதியாக இருக்க மாட்டேன். நான் படப்பிடிப்பு ஷூட்டிங்கிலும் சரி, திரைக்கு பின்னாலும் சரி எப்போதும் ஜாலியாகவும், சுறுசுறுப்பாகவும் தான் இருப்பேன்.

நல்ல கதைகளை நான் தேர்வு செய்து நடிப்பதன் மூலம் தான் எனது படம் வெற்றியை பெறுகிறது. இதுவரை நான் 50-க்கும் மேற்பட்ட படங்களை கேட்டு பிடிக்காமல் வேண்டாம் என்று மறுத்திருக்கிறேன்.

பல முன்னணி நடிகர்களின் படங்கள் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் ரஷ்மிகாவின் படம் வெற்றியை பெறுவதற்கு அவருடைய அதிர்ஷ்டம் தான் காரணம் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால், அதில் அதிர்ஷ்டம் மட்டுமில்லாமல் என்னுடைய உழைப்பும் அதிக பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார்.

From around the web