கவர்ச்சியாக நடித்து தவறு செய்து கொண்டேன்-வருத்தத்துடன் ரகுல் பீரித்தி சிங்..!

 
கவர்ச்சியாக நடித்து தவறு செய்து கொண்டேன்-வருத்தத்துடன் ரகுல் பீரித்தி சிங்..!

ரகுல் பீரித்தி சிங், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். தற்போது அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது,

நான் பல படங்களில் கவர்ச்சியாக நடித்தது தவறு என்று தற்போது புரிந்து கொண்டேன். நான் இதுவரை என்னுடைய படத்தின் இயக்குனருக்கோ, தயாரிப்பாளருக்கோ எந்த வித பிரச்சினையும் குடுத்ததில்லை. மேலும், படப்பிடிப்பிற்கு கூட என்னால் எந்த வித தடங்கலும் வர கூடாது என்று எண்ணி சரியான நேரத்தில் வந்து விடுவேன். அது மட்டுமின்றி, என்னுடைய சம்பளத்தை கூட விட்டு கொடுத்திருக்கின்றேன். இருப்பினும் எனக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதற்கு காரணம் நான் நடிப்பிற்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களுக்கு நடிக்காமல் கவர்ச்சியாக நடித்தது தான்.

இதனையடுத்து, நான் தற்போது சைவ உணவிற்கு மாறிவிட்டதாகவும், வெளிநாடுகளில் படப்பிடிப்பு என்றால் வீட்டில் இருந்து கொண்டு வரும் சைவ உணவை தான் நான் சாப்பிடுவதாகவும் கூறியுள்ளார். தற்போது இதை கடுமையாக கடைப்பிடித்து வருகிறேன் என்றும ரகுல் பீரித்தி சிங் கூறியுள்ளார்.

From around the web