கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நாகார்ஜுனா…!

 
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட ஊழியர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய நாகார்ஜுனா…!

தெலுங்கு திரையுலகில்  உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் நாகார்ஜுனா .  தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அளவிற்கு வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. ஆம் , இந்த கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் உலக மக்கள் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்த நிலையில், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவி தொகையை அரசுக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்படதுறை ஊழியர்களுக்கும் வழங்கி வருகிறது.

இந்த நிலையில்  நாகார்ஜுனா அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் தடை உத்தரவு பிறப்பித்தது மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றும், தினசரி ஊதியம் வாங்கி தங்களது வாழ்க்கையை நடத்துபவர்களின் வாழ்வு தான் இந்த முடிவால் பாதிக்கப்படுகிறது. எனவே என்னால் இயன்ற ரூ. 1 கோடியை அவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். 

From around the web