நான் என் மனைவியை புரிந்து கொள்ள 13 வருடம்..! மக்கள் செல்வன் ஓபன் டாக்

 
நான் என் மனைவியை புரிந்து கொள்ள 13 வருடம்..! மக்கள் செல்வன் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் புதுப்பேட்டை என்ற தமிழ் திரைப்படத்தில் உதவி நடிகராக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி, அதனை தொடர்ந்து சுந்தரபாண்டியன்,ரம்மி, சேதுபதி, தர்மதுரை போன்ற திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும் தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார், இந்நிலையில் அன்மையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட இவர் சில விஷயங்களை கூறினார்.

அதில் முக்கியமாக நான் தொட்டு தாலி கட்டிய என் மனைவியை நான் புரிந்துகொள்ள 13வருடங்கள் ஆனது ஒரு பெண்ணை அவ்வளவு சீக்கிரம் யாராலும்  புரிந்து கொள்ள முடியாது. அதனால் எந்த ஒரு பெண்ணிடமும் போட்டி போடாதீர்கள், எந்த ஒரு பெண்ணையும் சீப்பாக பேசாதீர்கள் எனவும் அனைவரது முன்னாள் வெளிப்படையாக கூறியுள்ளார்.

From around the web