நித்தீன் மற்றும் கீர்த்தியின் ‘RangDe’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று…!

 
நித்தீன் மற்றும் கீர்த்தியின் ‘RangDe’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று…!

நித்தீன், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் பிரபல டோலிவுட் தயாரிப்பாளரும், திரைப்பட விநியோகதருமான சுதாகர் ரெட்டியின் மகன். இவர் ஜெயம் என்ற படத்தின் மூலம் சினிமாயுலகில் அறிமுகமானார். இவரது நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் பீஷ்மா. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நித்தீன் Range என்ற புது படத்தில் கமிட்டாகியுள்ளார்.

காதல் பொழுதுபோக்கு படமான இந்த படத்தை நாக வம்சி தயாரிப்பில் அட்லூரி வெங்கி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் நித்தீனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் மாதத்தில் நடந்தது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் இன்று மாலை 4.05 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web