அது நீதானே தளபதி விஜயிடம் சிக்கிய தீனா..!

 
அது நீதானே தளபதி விஜயிடம்  சிக்கிய தீனா..!

தளபதி விஜய் அவர்கள் தற்பொழுது தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனா அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாஸ்டர் திரைப்படத்தை சில விஷயங்களை பேசினார்.

மேலும் தளபதி விஜய் அண்ணா என்னிடம் நீதான அது என்று கேட்டார் நான் அதற்கு ஆமா அண்ணா கைதி திரைப்படத்தில் காமாட்சியாக நடித்திருந்தேன் என கூறியதற்கு இல்லை நீதானா அந்த பிராங்க் கால் செய்வது என்று கேட்டார்.

நான் ஆமா என்று கூறினேன் அதற்கு தளபதி விஜய் எனக்கும் சில பிராங்க் கால் செய்யவேண்டும் என்று கூறியுள்ளார் அதற்கு பிறகு நான் நடித்த சிறந்த காட்சிகளை அவருக்கு காட்டினேன் அதற்கு பிறகு அவர் நல்லா இருக்கு என்று கூறினார்.

மேலும் தீனா அத்துடன் தனது பேச்சை மாஸ்டர் படம் வெளிவந்ததும் நிறைய கூறுகிறேன் என்று கூறி முடித்துள்ளார்.

From around the web