இதோ, தெறிக்கவிட வந்துவிட்டது விஜயின் “மாஸ்டர் செகண்ட் லுக்”!

 
இதோ, தெறிக்கவிட வந்துவிட்டது விஜயின் “மாஸ்டர் செகண்ட் லுக்”!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் தளபதி விஜய் அவர்கள் நடித்துவரும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும், ஜோடியாக நடிகை மாளவிகா மோகனும் நடித்துள்ளனர்.

இவர்களுடன், அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் ஆகியோரும் நடிக்கின்றனர். படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த 31 ஆம் தேதி வெளியாகியது. அதில் நடிகர் விஜயின் படம் மட்டுமே இருந்தது.

இந்நிலையில் இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு படத்திற்கான செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியாகிவிட்டது. இதிலும் விஜய் தான் உள்ளார். இதில் விஜய் மாணவர்களை பார்த்து அமைதி என கையை வைத்தது போல வந்துள்ளது. இதோ, அந்த அட்டகாசமான போஸ்டர்,

From around the web