தர்பாருடன் மோத தயாரான தனுஷின் பட்டாஸ்..! பொங்கல் 2020..!

 
தர்பாருடன் மோத தயாரான தனுஷின் பட்டாஸ்..! பொங்கல் 2020..!

தனுஷ் நடிப்பில் அண்மையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ‘பட்டாஸ்’ படம் தயாராகி வருகின்றது.கொடி பட இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. இப்படத்தில் நடிகை சினேகா தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

தனுஷின் பிறந்தநாள் அன்றுஇத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பட்டாஸ்’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. இந்த மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பட்டாஸ் ஹிரோவான தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த மோஷன் போஸ்டரை வெளியுட்டுள்ளார்.தற்போது இந்த மோஷன் போஸ்டர் வைரலாகி வருகிறது.

From around the web