சல்மான்கானுக்கு ஜோடியாகும் நடிகை பூஜா ஹெக்டே!

 
சல்மான்கானுக்கு ஜோடியாகும் நடிகை பூஜா ஹெக்டே!

தமிழில் முகமூடி எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய நடிகை தான் பூஜா ஹெக்டே. அதனை தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக கபி கபி தீபாவளி எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றின் மூலம் வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த 2020 ஆம் ஆண்டு சிறப்பாக தொடங்கியுள்ளதாகவும், நடிகர்களுடன் நடிக்க மிகுந்த ஆர்வத்தோடு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

From around the web