தன்னை பற்றிய காதல் வதந்திகளுக்கு விளக்கம் தெரிவித்த பிரியா பவானி சங்கர்…!

 
தன்னை பற்றிய காதல் வதந்திகளுக்கு விளக்கம் தெரிவித்த பிரியா பவானி சங்கர்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். அண்மையில் இவருக்கும், நடிகர் மற்றும் இயக்குநரான எஸ். ஜே. சூர்யாவையும் இணைத்து பல கிசுகிசுக்கள் வெளியாகின.

எஸ். ஜே.சூர்யா அவர்கள் படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவரது காதலை தெரிவித்ததாகவும், அதை பிரியா ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, எஸ். ஜே.சூர்யா அவர்கள் இதை ஏற்க மறுத்தது மட்டுமில்லாமல் பிரியா எனக்கு ஒரு நல்ல தோழி மட்டுமே என்று கூறியுள்ளார். இதற்கு எந்த பதிலும் சொல்லாத பிரியா தற்போது முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

என்னை பற்றியும், எஸ். ஜே.சூர்யா பற்றியும் வெளியான வதந்திகளுக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க வில்லை என்றும், இந்த கிசுகிசுக்களை பார்த்து என் நண்பர்கள் கேலி செய்வதை எப்படி எதிர்கொள்ள போகிறேன் என்ற பயம் மட்டுமே எனக்குள் இருந்தது என்றும் கூறியுள்ளார். மேலும், எனக்கும் அவருக்கும், நிஜத்தில் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

From around the web