பிரியா ஆனந்த்தின் அடுத்த படம் யாருடன் தெரியுமா..?

 
பிரியா ஆனந்த்தின் அடுத்த படம் யாருடன் தெரியுமா..?

வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதனை தொடர்ந்து, இவர் 180,எதிர் நீச்சல், வணக்கம் சென்னை ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.இதனையடுத்து கடந்த ஆண்டு வெளியான எல்கேஜி பெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில், இவர் ஆர். ஜே. பாலாஜிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ரீமேக் படமான ஆதித்ய வர்மா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் மேலும் பல மொழிகளில் படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் ரவியரசு இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிக்கும் கன்னட படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இந்த படத்தை ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது.

From around the web