ஜோதிடரும் நானும் கூட்டாளி- ஏமாற்றியதால் ஜோதிடரை ஓட ஓட விரட்டினேன்!

 
ஜோதிடரும் நானும் கூட்டாளி- ஏமாற்றியதால் ஜோதிடரை ஓட ஓட விரட்டினேன்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்பவர் தான் பாக்யராஜ். இவர் பல தமிழ் வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போதும் வாயை மூடி பேசவும் எனும் படத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது தனது சிறுவயதில் தான் செய்த அட்டூழியத்தை கூறியுள்ளார். அப்பொழுது தனது சிறுவயதில் ரோட்டில் வந்த ஜோசியர் ஒருவரை அழைத்து தனது குடும்ப நிலையை  எங்கள் வீட்டில் சென்று இதை கூறுங்கள்.

அவர்களும் அதை நம்பி உங்களுக்கு பணம் தருவார்கள், நாம் இருவரும் பாதி பாதி  எடுத்துக்கொள்ளலாம் என கூறினேன். ஆனால், அவர் வீட்டில் நான் சொன்னவைகளை எல்லாம் சொல்லி பணம் வாங்கி கொண்டார். அதன் பின்பு பணத்தை எனக்கு தாராமலே ஓடிவிட்டார். கடைசியில் அவரை நான் ரோடு ரோடாக விரட்டி எனக்கான பங்கை வாங்கிவிட்டேன் என கூறி சிரித்துள்ளார்.

From around the web