அனுஷ்காவிற்கு பிரபல தெலுங்கு இயக்குனருடன் திருமணமா…?

 
அனுஷ்காவிற்கு பிரபல தெலுங்கு இயக்குனருடன் திருமணமா…?

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார், அனுஷ்கா.இவர் பல பிரபல நடிகர்களான விஜய், அஜித் குமார், ரஜினிகாந்த் மற்றும் பலருடன் நடித்துள்ளார்.இவருக்கு 38 வயது ஆகின்றது.

இவர் புகழ்பெற்ற பாகுபலி படத்தில் நடித்து கொண்டிருந்த போது இவருக்கும் , இவருடன் நடித்த பிரபாஸிக்கும் இடையே காதல் என்று பல தகவல்கள் வெளியானது.இதனை இரண்டு பேரும் மறுத்துள்ளார்கள்.இதனை தொடர்ந்து, அவருக்கு திருமணம் என்றும், ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் வதந்திகள் பரவின.

தற்போது, அனுஷ்கா கிரிக்கெட் வீரர் ஒருவரை காதல் செய்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.அவர் காதலிப்பவர் ஒரு வட இந்திய கிரிக்கெட் வீரர் என்றும், அவர் ரஞ்சி போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் எனவும் தகவல் வெளியானது.

இதற்கு விளக்கம் தெரிவித்து அனுஷ்கா கூறியதாவது,எனது திருமணத்தை என் பெற்றோர்களிடமே ஒப்படைத்து உள்ளேன் எனவும், அவர் யாரை காட்டுகிறார்களோ அவரையே திருமணம் செய்ய போவதாகவும் கூறினார்.இந்த நிலையில், தற்போது அனுஷ்காவிற்கும், தெலுங்கு இயக்குனரான பிரகாஷ் கோவலமுடிக்கும் விரைவில் திருமணம் நடக்க போவதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது.

அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த இஞ்சி இடுப்பழகி என்ற தமிழ் படத்தையும் , தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற படத்தையும் இயக்கியவர் தான் பிரகாஷ் கோவலமுடி.இவருக்கு தற்போது 44வயது என்றும், ஏற்கனவே ஒருவரை திருமணம் செய்து விவாகரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

From around the web